2015ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.
இதற்கான விழா, நாளை, மார்ச் 6ஆம் தேதி மாலை, சென்னை RAபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை டிஎன் ராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான முதல் பரிசை ‘தனி ஒருவன்’ திரைப்படம் பெற்றுள்ளது.
இரண்டாம் பரிசு ‘பசங்க 2’ படத்திற்கும், மூன்றாம் பரிசு ‘பிரபா’ படத்திற்கும் கிடைத்துள்ளது.
மேலும், சிறப்பு பரிசாக ‘இறுதி சுற்று’ படத்திற்கும், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படமாக ’36 வயதிலேயே’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகருக்கான விருதை, ‘இறுதி சுற்று’ல் நடித்ததற்காக மாதவனும், சிறந்த நடிகைக்கான விருதை ’36 வயதிலே’ படத்தில் நடித்ததற்காக ஜோதிகாவும் பெறுகின்றனர்.