சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கரையை கடக்கும் போது சுமார் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல், புயலாகவே கரையை கடக்க துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கிமீ வேகத்தில் மெதுவாகவே இந்த புயல் கரையை கடந்து வருகிறது.
ஃபெஞ்சல் புயல் மெதுவாக கரையை கடக்க துவங்க துவங்கியுள்ளதால், முழுதாக புயல் கரையை கடக்க சில மணிநேரங்கள் ஆகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் சமயத்தில் வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024