புயல் காரணமாக திருவண்ணாமலையில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்த நிலையில் நேற்று மலையிலிருந்து மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில், 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கிக்கொண்டனர்.
இவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவும் தீயணைப்பு துறையினரும் போராடி வரும் நிலையில் 5 பேரின் உடல் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
மீட்பு பணி 12 மணிநேரம் தொடர்ந்து நடைபெற்ற பின்னர் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மண் மற்றும் பாறைகள் சரிந்து இரண்டு வீடுகளை அழித்து விட்டன.
இவற்றில் 7 பேர் சிக்கிக் கொண்டனர் – ராஜ்குமார், மீனா தம்பதி; அவர்களின் குழந்தைகள் கவுதம் (8), இனியா (6) மற்றும் பக்கத்து வீட்டு சிறுவர்கள் மகா (12), வினோதினி (16), ரம்யா(12) ஆகியோர்.