12ஆவது உலக காணொளி ஊடக மன்றக் கூட்டம் டிசம்பர் 3ஆம் நாள் சீனாவின் ஃபுஜியேன் மாநிலத்தின் ஜிவேன்சோ நகரில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், மத்திய கமிட்டிப் பரப்புரைத் துறை அமைச்சருமான லீ ஹூலேய் காணொளி வழியாக இம்மன்றத்தின் துவக்க விழாவில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்.
உலக நாகரிக முன்மொழிவை நடைமுறைப்படுத்தி சர்வதேச மானிடப் பண்பாட்டியல் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குவதில் பன்னாட்டுக் காணொளி ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கும். ஒன்றுடன் ஒன்று நாகரிகப் பரிமாற்றம் மேற்கொண்டு ஒன்றிடமிருந்து ஒன்று கற்றுக்கொள்வதற்கான இணையத்தள மேடையை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும். ஊடகங்களின் கடமையில் ஊன்றி நிற்க வேண்டும் என்று அதில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கருத்து தெரிவித்தனர்.
60க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 87 ஊடக நிறுவனங்களின் சுமார் 200 பிரதிநிதிகள் இம்மன்றக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதற்கிடையில் தெற்குலக ஊடகங்களின் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பு அமைப்பு முறை பற்றிய கூட்டு முன்மொழிவை அவர்கள் கூட்டாக வெளியிட்டனர்.