விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக அதிகனமழை கொட்டித் தீர்த்ததால், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை (டிச.04) அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மற்ற மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.