டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பரில் அதிக மழைப்பொழிவு, சில மாவட்டங்களில் இயல்பைவிட 75% அதிகமாக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் இம்மாதத்தில் இயல்பைவிட 131% அதிக மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இந்த வார இறுதியில் புயல் உருவாகும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு வானிலை மையம் மறுப்பு தெரிவித்துள்ளது. புயல் உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைய வானிலை நிலவரப்படி இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.