சென்னையில் மூன்று சுரங்கப்பாதையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக, நேற்று சென்னையில் பலத்த மழை பெய்தது. இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில், ரங்கராஜபுரம், கெங்குரெட்டி மற்றும் மேட்லி ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
அதிக அளவு மழைநீர் தேங்கியுள்ளதால், அழகப்பாசாலை மற்றும் லூப் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பர்னாபி சாலை, நாகேஸ்வரா பூங்கா, அண்ணா மேம்பாலம் சர்வீஸ் சாலை மற்றும் ஸ்ரீமான் சீனிவாசா சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.