சென்னையில் தண்ணீர் தேங்கும் பிரச்சினைக்கு அடுத்த பருவமழைக்குள் தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டாளம் பகுதியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தயார் நிலையில் இருந்ததால் வெள்ள பாதிப்பை திறமையோடு எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார் தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 600Hp திறன் கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அம்மா உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும், முகாம்களில் உள்ள மக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுவதாகவும் சேகர் பாபு தெரிவித்தார்.