சீன ஊடகக் குழுமமும் இலங்கைக்கான சீனத் தூதரகமும் இணைந்து ஏற்பாடு செய்த புத்தாக்கம், திறப்பு மற்றும் பகிர்வுடன் கூடிய வளர்ச்சிக்கான உலக உரையாடல் எனும் நிகழ்ச்சி அக்டோபர் 28ஆம் நாள் இலங்கையின் கொழும்புவில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான ஷென் ஹய்சியொங் இதில் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார்.
இலங்கைக்கான சீனத் தூதர் ஜிட்சென்ஹூவுங், இலங்கைத் தொழிலாளர் துறை அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் துறையின் துணை அமைச்சருமான அனில் ஜெயந்த முதலியோர் இதில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் சீனா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அரசியல், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, ஊடகம் மற்றும் மாணவர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான விருந்தினர்கள் பங்கேற்றனர்.
