“என்ன தோற்கடிக்கப் பாக்குறாங்க…” – மதுரையில் மனம் திறந்த செல்லூர் ராஜூ..!! 

Estimated read time 0 min read

மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் மக்களுடன் நெருக்கமாக இருப்பதால் மக்கள் தனக்கு தொடர்ந்து வாக்களிப்பதாகத் தெரிவித்தார்.

தான் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவேனா அல்லது தொகுதி மாறுவேனா என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்வார் என்றும், தன்னைத் தோற்கடிக்க நினைப்பவர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், நடிகை த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சை முடிந்துபோன ஒன்று என குறிப்பிட்ட அவர், தேர்தல் களம் என்பது எப்போதும் திமுக மற்றும் அதிமுக இடையேதான் இருக்கும் என்றார்.

புதிய கட்சிகளின் வருகை குறித்து கவலைப்படவில்லை என்றும், தன்னைச் சிக்க வைக்கும் வகையில் கேள்விகளைக் கேட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்ய வேண்டாம் எனவும் கலகலப்பாகக் கேட்டுக்கொண்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author