32-வது ஏபெக் உச்சி மாநாட்டுக்கான கருத்து கணிப்பு

 

32வது ஏபெக் உச்சி மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். 15 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களிலுள்ள பதிலளித்தவர்களுக்கு ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.

ஏபெக் என்பது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிக உயர் நிலையான, மிகவும் விரிவான மற்றும் செல்வாக்கு மிக்க பொருளாதார ஒத்துழைப்பு அமைப்புமுறையாகும் என்ற கருத்தை 83.3விழுக்காட்டு பதிலளித்தவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

 

இந்தக் கருத்து கணிப்பில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க ஒத்துழைப்பை மேம்படுத்துதல்”, “வர்த்தகம் மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கலை ஊக்குவித்தல்” மற்றும் “எல்லை தாண்டிய மக்களின் நடமாட்டத்தை எளிதாக்குதல்” ஆகியவை, ஆசிய-பசிபிக் பிராந்திய ஒருங்கிணைப்பில் முதல் மூன்று சாதனைகளாக தரவரிசைப்படுத்தப்பட்டன.

 

மேலும், பதிலளித்தவர்களில் 83.2 விழுக்காட்டினர் ஆசிய-பசிபிக் ஒருங்கிணைப்பின் வாய்ப்புகளின் மீது நம்பிக்கையை கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

தவிர, ஆசிய-பசிபிக் நாடுகள் பலதரப்புவாதம் மற்றும் பொருளாதார உலகமயமாக்கலில் ஊன்றி நிற்க வேண்டும் என்றும், திறந்த பொருளாதாரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு கட்டமைப்பை கூட்டாக உருவாக்க வேண்டும் என்றும் 84.6 விழுக்காட்டினர் சுட்டிக்காட்டினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author