நேட்டோவின் ஆசிய-பசிபிக்மயமாக்கல் நெருக்கடி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்துவது உறுதி

நேட்டோ உச்சிமாநாடு ஜூலை 11ஆம் நாள் லிதுவானியாவில் துவங்கியது. உக்ரைன் நிலைமை என்ற முக்கிய கருப்பொருளைத் தவிர, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து 2ஆவது ஆண்டாக இம்மாநாட்டில் கலந்து கொண்டதால், நேட்டோவின் ஆசிய-பசிபிக்மயமாக்கல் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜப்பானில் ஆசியாவிலுள்ள முதலாவது தொடர்பு அலுவலகத்தை நேட்டோ நிறுவுதல் பற்றிய திட்டவரைவு இம்மாநாட்டில் விவாதிக்கப்படத் திட்டமிட்டிருந்தது. ஆனால், பிரான்ஸின் எதிர்ப்பால் இந்த விவாதம் இலையுதிர் காலத்துக்குப் பின்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஜப்பானின் செய்தி ஊடகம் அறிவித்தது. அமெரிக்காவின் தலைமையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கு நேட்டோ அதன் சக்தியைப் பரவல் செய்யும் நோக்கம் மாறாது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
பனிப் போர் காலத்தின் விளைபொருளாக, நேட்டோ நிறுவப்பட்டது முதல் இதுவரை அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தைப் பேணிக்காப்பதற்கான மைய ஆதாரத் தூணாக விளங்கியுள்ளது. எதிரியில்லாமல் வாழ முடியாது என்பது அதன் இயக்க தத்துவமாகும்.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ ஈடுபட்டு ஆசிய-பசிபிக் நாடுகளின் உள்விவகார நிர்வாகம் மற்றும் மதிப்புகளை மேற்கத்தியமயமாக்கினால், பொது எதிர்ப்பை ஏற்படுத்தி நெருக்கடி மற்றும் கொந்தளிப்பு கொண்டு வருவது உறுதி.
ஆசிய-பசிபிக் பிராந்தியம் ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான இடமாகும். பெரிய நாடுகளிடையில் அரசியல் நோக்கில் போட்டியிடும் கருவி அல்ல.

Please follow and like us:

You May Also Like

More From Author