உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் நகரில், புனித நதியாக போற்றப்படும் கங்கை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான கண்ணாடித் தொங்கு பாலமான பஜ்ரங் சேது (Bajrang Setu) விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.
சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கம்பீரமாக நின்ற, அடையாளச் சின்னமாக விளங்கிய லட்சுமண் ஜூலா பாலம் பலவீனமானதைத் தொடர்ந்து மூடப்பட்ட அதே இடத்தில், தற்போது இந்தப் புதிய, பாதுகாப்பான பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இப்பகுதியைக் காணும் அனுபவம் முழுமையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் ₹60 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பஜ்ரங் சேது, 132 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்டது.
ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு
