டெவலப்பர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பாக, OpenAI நிறுவனத்தின் கட்டணச் சேவைப் பதிப்பான ChatGPT Go இந்தியாவில் இன்று முதல் ஒரு முழு ஆண்டிற்கு இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட கால சலுகை காலத்தில் பதிவு செய்யும் அனைத்து பயனாளர்களும், பொதுவாக கட்டணம் வசூலிக்கப்படும் Go பதிப்பை ஒரு வருடத்திற்கு இலவசமாகப் பயன்படுத்தலாம்.
ஏற்கெனவே ChatGPT Go சந்தா வைத்திருப்பவர்களும் இந்த சலுகையை பெறுவதற்கான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
பெங்களூருவில் நடைபெறும் OpenAI இன் முதல் ‘DevDay Exchange’ நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, இந்தியப் பயனர்களின் “உற்சாகத்தையும் படைப்பாற்றலையும்” பாராட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக OpenAI தெரிவித்துள்ளது.
இன்று முதல் ஒரு வருடத்திற்கு இந்தியாவில் ChatGPT Go இலவசம்
