சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங், நவம்பர் 6ஆம் நாள் முற்பகல், சீனாவின் ஹைய்நான் மாநிலத்தின் சான் யா நகரில், ஹைய்நான் தாராள வர்த்தக துறைமுகக் கட்டுமானம் குறித்த பணியறிக்கையைக் கேட்டறிந்தார். ஹைய்நான் தாராள வர்த்தக துறைமுகக் கட்டுமானம் எனும் இலக்கை பன்முகங்களிலும் நனவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், ஹைய்நான் தாராள வர்த்தக துறைமுகக் கட்டுமானம் எனும் நெடுநோக்கு இலக்கை நனவாக்க வேண்டுமானால், புதிய யுகத்தில் சீனாவின் வெளிநாட்டுத் திறப்புக்கான முக்கிய ஜன்னலாக இத்துறைமுகத்தை நிறுவ வேண்டும் எனக் குறிப்பிட்டார். வர்த்தகம், முதலீட்டு தாராளமயமாக்கம் மற்றும் வசதிமயமாக்க நிலைமையை மேலும் வலுப்படுத்தி, மேலும் திறப்பு ரீதியில் திறமைசாலி வளர்ச்சி அமைப்புமுறையை உருவாக்கி, இத்துறைமுக கட்டுமானத்திற்குத் தேவையான திறமைசாலி மூலவளங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
