தற்போது நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்குத் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி 9.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45 ரன்களுக்குச் சுருண்டது.
மிகவும் அபாரமாகப் பந்துவீசிய இந்திய அணி, இலங்கையைச் சீக்கிரமாகவே சுருட்டி 124 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் ஏற்கனவே வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிகள் நுழைந்த நிலையில் தற்போது ஆசிய போட்டி இறுதியில் பரம எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதுவது உறுதியாகியுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
