ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) ஸ்டாவஞ்சரில் நடந்த நார்வே செஸ் 2025 போட்டியில், நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம், 19 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிரான முதல் கிளாசிக்கல் வெற்றியைப் பெற்றுள்ளார்.
இது அவரது வளர்ந்து வரும் வாழ்க்கையில் ஒரு வரலாற்று தருணமாக அமைந்தது. போட்டியின் தொடக்க சுற்றில் கார்ல்சனிடம் தோற்ற குகேஷ், ஆட்டத்தின் பெரும்பகுதிக்கு கடினமான நிலையில் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க அளவில் மீண்டு வந்தார்.
மேலும், கார்ல்சனின் ஒரு அரிய தவறை அவர் பயன்படுத்திக் கொண்டார். இதன் மூலம், நான்கு மணி நேர ஆட்டத்தில் 62 தீவிர நகர்வுகளுக்குப் பிறகு வெற்றியைப் பெற்றார்.
கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார் டி.குகேஷ்
