துள்ளுவதோ இளமை நடிகர் அபிநய் காலமானார்

Estimated read time 0 min read

நடிகர் தனுஷுடன் இணைந்து துள்ளுவதோ இளமை (2002) திரைப்படத்தில் அவரது நண்பராக நடித்து பிரபலமான நடிகர் அபிநய், திங்கட்கிழமை (நவம்பர் 10) அதிகாலை 4 மணியளவில் உடல்நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அபிநய், அதைத் தொடர்ந்து சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
பின்னர் அவர் என்றென்றும் புன்னகை, ஆறுமுகம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததுடன், விஜயின் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனுக்குக் குரல் கொடுத்தும் பிரபலமானார்.

You May Also Like

More From Author