இந்தியத் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ மற்றும் ‘தன்வி’ ஆகிய இரண்டு இந்தியத் திரைப்படங்கள் 98 வது ஆஸ்கார் விருதுகளின் சிறந்த திரைப்படப் பிரிவிற்கான (Best Picture) தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் வெளியிட்டுள்ள 276 தகுதியான திரைப்படங்களின் பட்டியலில் இந்தத் திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.
இது சர்வதேச அளவில் இந்தியக் கதைகளுக்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் காந்தாரா: சாப்டர் 1 மற்றும் தன்வி திரைப்படங்கள் சேர்ப்பு
