ஷாங்காய்க்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான வழக்கமான வணிக விமானச் சேவை ஜனவரி முதல் நாள் துவங்கியது.
China eastern நிறுவனத்தைச் சேர்ந்த C919 விமானம் இச்சேவையை அளித்தது. சீனா தயாரித்த C919 விமானம், பிரதேச வணிக விமானச் சேவையைத் தொடங்குவதை இது காட்டியுள்ளது.
இந்த வழக்கமான வணிக விமானச் சேவை, நாள் ஒன்றுக்கு இருவழி பயணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், AIR China, China Southern ஆகிய இரு விமான நிறுவனங்களும், C919 விமானத்தின் வணிகச் சேவையைத் தொடங்கியுள்ளன. C919 விமானத்தின் பெருமளவிலான பயன்பாடு, புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதை இது காட்டியுள்ளது.