இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தி படி, தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், இறுதிப் போட்டி இலங்கையின் கொழும்பு நகருக்கு மாற்றப்படலாம் என்று BCCI மற்றும் PCB இடையேயான ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.
2026 டி20 உலகக் கோப்பை: இறுதிப் போட்டி அகமதாபாத்தில்; அரையிறுதி மும்பைக்கு ஒதுக்கீடு?
