யாகி சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து மியான்மரில் 74 பேர் இறந்துள்ளனர் மற்றும் இன்னும் பலரைக் காணவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அறிக்கைகளின்படி, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் துயரில் உள்ள மியான்மரில், அடுத்த இடியாக தாக்கிய யாகி சூறாவளியால் நாடு முழுவதும் 450க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளை வெள்ளம் பாதித்துள்ளது.
74 பேர் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 89 பேரை தேடும் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பாதிப்பில் சுமார் 65,000 வீடுகள் அழிந்துள்ளன.
யாகி சூறாவளி பாதிப்பால் மியான்மரில் 74 பேர் பலி
Estimated read time
0 min read