ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு 38 பேர் உயிரிழந்த ஒரு அஜர்பைஜான் ஜெட் விமானத்தை ரஷ்ய விமானப் பாதுகாப்பு அமைப்புகளே சுட்டு வீழ்த்தியதாக வியாழக்கிழமை (அக்டோபர் 9) ஒப்புக்கொண்டுள்ளார்.
முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தஜிகிஸ்தானின் துஷான்பே தலைநகரில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுடன் நடந்த சந்திப்பின்போது விளாடிமிர் புடின் இந்த முக்கிய அறிக்கையை வெளியிட்டார்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் பயணிகள் ஜெட் விமானம், பக்குவில் இருந்து குரோஸ்னிக்குப் (செச்சினியாவின் தலைநகரம்) பறந்துகொண்டிருந்தபோது, டிசம்பர் 25, 2024 அன்று விபத்துக்குள்ளானது.
ஆரம்பத்தில், ரஷ்ய விமானத் தடுப்பு அமைப்புகளால் தவறுதலாகத் தாக்கப்பட்ட விமானம், கஜகஸ்தானில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது என்று அஜர்பைஜான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அஜர்பைஜான் ஜெட் விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாதான்: விளாடிமிர் புடின் ஒப்புதல்
