அமெரிக்காவின் உலகளாவிய 15 சதவீத இறக்குமதி வரி இந்த வாரத்தில் அமல்?  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள உலகளாவிய தற்காலிக இறக்குமதி வரி விரைவில் 15 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட், இந்த வரி உயர்வு இன்னும் சில நாட்களில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம், சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகார சட்டத்தின் (IEEPA) கீழ் அதிபர் வரிகளை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது.
இந்த சட்ட பின்னடைவை தொடர்ந்து, 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ஐ பயன்படுத்தி புதிய வரி விதிப்புகளை ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, தற்போது அமலில் உள்ள 10 சதவீத வரியானது 15 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

You May Also Like

More From Author