ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கான அஃபிலியெட்ஸ் விதிகளின் நடைமுறையை ஓராண்டாக இடைநிறுத்துமென நவம்பர் 10ம் நாள், அமெரிக்க வணிகத் துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் பாதுகாப்பு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இது குறித்து சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீன-அமெரிக்க கோலாலம்பூர் கலந்தாய்வின் பொது கருத்துக்களை அமெரிக்கா செயல்படுத்தும் முக்கிய நடவடிக்கை இதுவாகும். ஓராண்டுக்குப் பிறகு, இரு தரப்பினரும் இப்பிரச்சினை குறித்து தொடர்ந்து விவாதம் நடத்தும். அமெரிக்காவுடன் இணைந்து, ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, சமத்துவ நிலையில் கலந்தாய்வு செய்யும் கோட்பாட்டின்படி, சர்ச்சையைச் சமாளித்து, இரு நாட்டுத் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கும், உலகின் தொழில் மற்றும் விநியோகச் சங்கிலியின் நிதானத்துக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் சீரான சூழலை உருவாக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
