சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள் முதலியோர் ஷிச்சின்பிங்குப் பணி அறிக்கை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தொடர்புடைய விதிகளின் படி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினர்கள், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் முதலியோர் தங்களது ஆண்டறிக்கைகளைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்குக்கும் சமர்பித்தனர்.
ஷிச்சின்பிங் பணி அறிக்கைகளை உணர்வுபூர்வமாக படித்து, முக்கியமான கோரிக்கைகளை விடுத்தார். அவர் கூறுகையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 75 ஆண்டு நிறைவான இவ்வாண்டு, 14ஆவது ஐந்து ஆண்டு திட்டத்தின் குறிக்கோள்களையும் பணிகளையும் அடைவதற்கு முக்கியமான ஆண்டாகும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது தேசிய மாநாடு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 2வது முழு அமர்வில் எட்டியுள்ள எழுச்சியைப் பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கை தீர்மானம் மற்றும் பல்வேறு பணிகளைச் செயல்படுத்தும் விதம், சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.