சீனாவின் சிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-3 பீ ஏவூர்தி மூலம், சீனாவின் 14ஆவது தொலைத்தொடர்புத் தொழில்நுட்பப் பரிசோதனை செயற்கைக்கோள் ஜனவரி 23ஆம் நாள் விண்ணில் ஏவப்பட்டது.
இது தடையின்றி திட்டமிட்ட சுற்று வட்டப் பாதையில் நுழைந்ததையடுத்து, இக்கடமை முழுமையாக வெற்றி பெற்றது.
செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானொலி மற்றும் தொலைக்காட்சி, தரவு பரிமாற்றம் முதலிய சேவைகளுக்கு இக்செயற்கைக்கோள் முக்கியமாக பயன்படுத்தப்படும். லாங்மார்ச் ஏவூர்திகள் தொகுதியின் 558ஆவது பறத்தல் கடமை இது என்பது குறிப்பிடத்தக்கது.