சீனத் தேசிய அறிவுசார் சொத்துரிமை பணியகம் டிசம்பர் 23ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டம் வெளியிட்ட தகவல்களின்படி, இவ்வாண்டின் நவம்பர் திங்கள் வரை, சீனாவின் உள்நாட்டளவில் கண்டுபிடிப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பதிவு செய்தவர்களில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 73.5 விழுக்காட்டை வகித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 2.5 விழுக்காட்டுப் புள்ளி உயர்ந்துள்ளது.
தொடர்புடைய தரவுகளின்படி, சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புத்தாக்கம் சுறுசுறுப்பாக வளர்ந்து, பாதுகாப்பு மற்றும் இயக்க ஆற்றல் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது.
2024ஆம் ஆண்டில், சீனாவின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளில் 55.1 விழுக்காட்டளவு தொழில் துறைமயமாக்கப்பட்டு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 3.6 விழுக்காட்டுப் புள்ளி அதிகரித்துள்ளது.