செங்கோட்டை அருகே சமீபத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை லோக் நாயக் மருத்துவமனைக்கு சென்றார்.
பூட்டானுக்கு இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய சிறிது நேரத்திலேயே அவர் மருத்துவமனைக்கு விரைந்தார்.
இந்த வருகைக்காக காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது என்று ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா திரும்புவதற்கு முன்பு, பூட்டானில் உரையாற்றுகையில், இந்த குண்டுவெடிப்பிற்கு பொறுப்பானவர்கள் வேரோடு கலையெடுக்கப்படுவார்கள் என மோடி உறுதியளித்திருந்தார்.
“இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.
பூட்டானில் இருந்து திரும்பியதும் டெல்லி குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி
