சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில பொருளாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “வன்னியர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 17 ல் அனைத்து தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். லட்சக்கணக்கானோர் திரண்டு 234 தொகுதிகளிலும் போராட்டம் நடத்த வேண்டும். நடைபயணத்துக்கு முன்னால் மிகவும் மன உளைச்சலில் இருந்தேன்.. முருகா எல்லாத்தையும் பாத்துக்கோன்னு சொல்லிட்டு ஆரம்பிச்சேன். திமுக மீது மக்களுக்கு கோபம் அலையாக வீசிக்கொண்டிருக்கிறது. அந்த அலை இன்னும் 3 மாதத்தில் சுனாமியாக மாறி திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்கிறார்.
தேர்தல் ஆணையம் என்னை அங்கீகாரம் செய்துவிட்டார்கள். மாம்பழ சின்னத்தை நமக்கு தான் தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது, அதனை ஒன்றும் செய்ய முடியாது. நீதிமன்றம் சென்றாலும் ஒன்றும் நடக்காது. அய்யாவை அங்கு உள்ளவர்கள் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் கட்சிக்கும் அய்யாவிற்கும்தான் உழைத்தேன். இனியும் அதுபோலத்தான் உழைப்பேன். இன்னும் 5 மாதத்தில் பாமக எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக போகிறார்கள். அதனால் SIR நடவடிக்கைகளை ஆழமாக தெரிந்துகொள்ள்ள வேண்டும். மேலோட்டமாக இருந்தால் வேலைக்காகாது.” என பேசினார்.
