8ஆவது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி மற்றும் ஹொங்சியௌ சர்வதேச பொருளாதார மன்றக் கூட்டத்தின் துவக்க விழா நவம்பர் 5ஆம் நாளில் நடைபெற்றது. சீன தலைமையமைச்சர் லீச்சியாங் இதில் கலந்துகொண்டு உரைநிகழத்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
இப்பொருட்காட்சி, உலகப் பொருளாதாரம் சீனப் பொருளாதாரத்தை ஒருங்கிணையும் ஜன்னலாகவும், சீனா உலகத்துடன் ஒன்றிணையும் முக்கிய பாலமாகவும் விளங்குகிறது என்றார்.
அண்மையில் நடைபேற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வு, எதிர் வரும் காலக்கட்டத்தில், சீனப் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு மேலதிகமான உறுதித் தன்மையைக் கொண்டு வந்துள்ளது. நவீனமயமாக்கத்தைத் தொடர்ந்து நனவாக்கும் சீனா, உலகத்திற்கு மேலும் நிதானம் மற்றும் உந்து ஆற்றலைக் கொண்டு வரும் என்றார்.
ஜார்ஜியா மற்றும் செர்பியா தலைமையமைச்சர்கள், நைஜீரியா நாடாளுமன்றத் தலைவர் உள்ளிட்ட 155 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் வணிக துறையினர்களும் ஆக 1500க்கும் மேலானோர் இதன் துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.
இப்பொருட்காட்சி, திறப்புப் பணியையும் ஒத்துழைப்புகளையும் விரிவாக்கி, உலக பொருளாதாரத்தை விரைவுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. உலகத்துடன், வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்துகொண்டு, கூட்டு வளர்ச்சியை நனவாக்கும் பெரிய நாட்டின் பொறுப்பை சீனா வெளிக்காட்டியுள்ளது என்று இதில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
