சீன துணை அரசுத் தலைவர் ஹன் செங், ஜுலை 2ஆம் நாள் 11ஆவது உலக அமைதி மன்றக்கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். சீனாவின் ட்சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இம்மன்றக்கூட்டத்தின் தலைப்பு, ஒத்த கருத்தை எட்டுவது, ஒத்துழைப்பை முன்னேற்றுவது, ஒழுங்கை நிதானப்படுத்துவது, அமைதியைப் பேணிக்காப்பது ஆகியவை ஆகும்.