கடந்த சில தசாப்தங்களாக, சீனப் பொருளாதாரம் அதிவேக வளர்ச்சி அடைந்து, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இருப்பினும், இந்த விரைவான வளர்ச்சியுடன், பல பிரச்சினைகளும் ஏற்பட்ட்டன. முதலில், காற்று, நீர் மற்றும் மண் மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்தது. இரண்டாவதாக, திறன் குறைந்த தொழில்களின் போட்டியாற்றல் குறைந்தது. மூன்றாவதாக, தரமான கல்வி, மருத்துவச் சேவை மற்றும் உயிரினச்சூழலைப் பெற நாட்டு மக்கள் அதிகமாக ஆசைப்படுகின்றனர். நாட்டின் வேறுபட்ட பிரதேசங்களுக்கிடையேயும் நகருக்கும் கிராமத்துக்கும் இடையேயும் சமமற்ற வளர்ச்சி காணப்பட்டது. கடைசியாக, உலகளாவிய அறிவியல் தொழில் நுட்ப போட்டியில் முக்கிய தொழில் நுட்பங்களின் தடை பிரச்சினையை எதிர்கொண்டு, சொந்த புத்தாக்க ஆற்றல் அதிகரிப்பது அவசியமானது.
இதனால், சீனப் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டு, தரமான வளர்ச்சியை நோக்கி முன்னேறுவது என்பது, தவிர்க்க முடியாத ஒரு தேர்வு ஆகும்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில், சீனப் பொருளாதார வளர்ச்சி குறித்து சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறுகையில், அதிவேகத்தை மட்டும் நாட முடியாது, உயர் தரமான வளர்ச்சியையும் அடைய வேண்டும் என்று முன்வைத்தார். 2020ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சீனாவின் 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், உயர் தரமான வளர்ச்சி என்பது சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய அம்சமாக உறுதிப்படுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டில் நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்தியக் கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் வெளியிடப்பட்ட 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தில், உயர் தரமான வளர்ச்சி என்பதை மீண்டும் மைய அம்சமாக உறுதிப்படுத்தப்பட்டது.
உயர் தரமான வளர்ச்சியை நடைமுறைப்படுத்தும் விதமாக, சீனா 3 முக்கிய துறைகளில் செயல்பட்டு வருகின்றது. முதலாவதாக, புத்தாக்கத்தை இயக்காற்றலாக வளர்க்க வேண்டும். இரண்டாவதாக, அதிக ஆற்றல் செலவு என்ற வளர்ச்சி மாதிரியிலிருந்து கார்பன் குறைந்த பசுமை வளர்ச்சி மாற்றத்துக்காக வளர்க்க வேண்டும். மூன்றாவதாக, திறப்பு மற்றும் கூட்டு பகிர்வு செய்ய வேண்டும்.
