மதுரையில் 15 வயது மாணவன் ஏர் கன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை சம்பக்குளம் வைரம் கார்டன்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் வடிவேல் – கிருத்திகா தம்பதியினரின் மூத்த மகனான யுவ நவநீதன் (15) மதுரை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்றுவருகிறார்.
துப்பாக்கி சுடு வீரரான யுவநவநீதன் சிறுவயதில் இருந்தே மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துவெற்றிபெற்று ஏராளமான பதக்கங்களை பெற்றுவந்துள்ளார். மதுரை ரைபிள் கிளப்பில் பயிற்சிபெற்றுவந்த யுவநவநீதன் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகிய நிலையில் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டவந்துள்ளார்.
இதனிடையே கடந்த வாரம் பயிற்சி முடித்துவிட்டு பயிற்சிக்கான ஏர் கன்னை வீட்டிற்கு பயிற்சிக்காக வைத்திருந்துள்ளார்.. இதனிடையே யுவநவநீதனின் பெற்றோர் கோவிலுக்கு சென்றுவிட்டதால் நேற்று யுவ நவநீதன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு யுவநவநீதனின் தாயார் வீட்டிற்கு திரும்பிய போது தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து புதூர் காவல்நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.