உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்! 18 வயது அனஹத் சிங் சாதனை  

Estimated read time 1 min read

கனடாவில் உள்ள நயாகரா-ஆன்-தி-லேக் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான ஜூனியர் ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான 18 வயதான அனஹத் சிங் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இதன் மூலமாக உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் வரலாற்றிலேயே சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற மாபெரும் பெருமையை அவர் அதிகாரப்பூர்வமாக பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

You May Also Like

More From Author