ரஷ்யா – உக்ரைன் இடையே தீவிரமடையும் ட்ரோன் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 15 பேர் பலி!  

Estimated read time 0 min read

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இரு நாடுகளும் பரஸ்பரம் நடத்திய தீவிர ட்ரோன் தாக்குதல்களில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் ஜபோரிஜியா பிராந்தியத்தில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிலோவ்கா ரிசார்ட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதில் 5 குழந்தைகள் பலியானதாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும் ரஷ்ய நிர்வாகி யெவ்கெனி பாலிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைன் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்கு வைத்துத் தாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

You May Also Like

More From Author