கிளாஸ்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனை படைத்துள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன்பு தனது சர்வதேச பயணத்தை தொடங்கிய அதே இடத்தில், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற 31 வயதான மீராபாய் சானு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ எடையும் தூக்கி, மொத்தமாக 190 கிலோ எடையை உயர்த்தி புதிய சாதனையைப் படைத்தார்.
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கம் வென்ற முதல் இந்திய பெண் பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மீராபாய் சானு காமன்வெல்த் விளையாட்டு 2026: 48கிலோ பளுதூக்குதலில் வரலாற்று சாதனையுடன் தங்கம் வென்றார்
