நிறைவடைந்த சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர்

Estimated read time 0 min read

சீனாவின் 14ஆவது தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடர் மார்ச் 12ம் நாள் மாலை மக்கள் மாமண்டபத்தில் நிறைவடைந்தது.

ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவர் ச்சாவ் லே ஜி இந்நிறைவு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

நிறைவு கூட்டத்தில், அரசு பணியறிக்கை, 15வது ஐந்தாண்டு திட்ட வரைவு, 3 சட்டங்களின் வரைவு ஆகியவை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ச்சாவ் லேஜி கூறுகையில்,

ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பதும் நடைமுறைப்படுத்துவதும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக அனுபவங்களில் ஒன்றாகும். 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை சீராக நடைமுறைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

நாங்கள், ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியுடன் ஒன்றிணைந்து, சீன பாணியுடைய நவீனமயமாக்கத்தின் புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்க வேண்டும் என்றார்.

You May Also Like

More From Author