ஜப்பானிலுள்ள சீன தூதரகத்தின் செய்தியின் படி, ஜப்பானுக்கான சீனத் தூதர் வூ ச்சியாங்ஹாவ், நவம்பர் 14ஆம் நாள், ஜப்பானின் துணை வெளியுறவு அமைச்சர் கென்ஹிரோ புனகோஷியைச் சந்தித்து, தகைச்சி சனேவின் தவறான கூற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சீனாவின் தைவான் குறித்து தகைச்சி சனே ஆத்திரமூட்டல் கூற்றை வெளியிட்டார். இது சீனாவின் உள் விவகாரங்களில் கடுமையாக தலையீடு செய்வதைக் காட்டுகிறது. சர்வதேச சட்டத்தையும் சர்வதேச உறவு கோட்பாட்டையும் இது மீறியது. 2ஆவது உலக போருக்கு பிறகு உருவாகிய சர்வதேச ஒழுங்கிற்கு இது தீங்கு விளைவித்துள்ளது. ஒரே சீனா கொள்கையும் சீன-ஜப்பான் 4 அரசியல் ஆவணங்களையும் இது சீர்குலைத்தது. சீன-ஜப்பான் உறவின் அரசியல் அடிப்படையை இது கடுமையாக பாதித்தது. இது குறித்து சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கின்றது என்று வூ ச்சியாங்ஹாவ் தெரிவித்தார்.
தைவான், சீனாவின் தைவான் தான். தைவான் பிரச்சினை, சீனாவின் மிக முக்கிய நலனாகும். எந்த வழிமுறையின் மூலம் தைவான் பிரச்சினையைத் தீர்ப்பது, சீனாவின் உள் விவகாரமாகும். வெளிப்புற சக்தி இதில் தலையீடு செய்ய கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
