சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகஸ்டு 21ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 7 மாதங்களில், கிராமங்களில் நுகர்வுச் சந்தை செழிப்பாக வளர்ந்து வருகிறது.
இணைய வழி சில்லறை விற்பனையின் மொத்த தொகை, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 6.4 விழுக்காடு அதிகமாகும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், மின்னணு வணிக அலுவல், கிராம வணிகப் பொருட்களின் விநியோகத்தை செழிப்பாக்கி வருகிறது. விவசாய பொருட்களின் இணைய வழி சில்லறை விற்பனையின் மொத்த தொகை கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 7.4 விழுக்காடு அதிகமாகும்.
இவ்வாண்டின் முற்பாதியில், கிராம மக்களின் நபர்வாரி செலவழிக்கக்கூடிய வருமானம் கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.2 விழுக்காடு அதிகமாகும் என்றும் தெரிவித்தார்.