இந்தியர்களுக்கு விசா-இல்லா நுழைவை ரத்து செய்த ஈரான்: மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை  

Estimated read time 1 min read

இந்திய பயணிகளுக்கான விசா இல்லாத நுழைவை ஈரானிய அரசு ரத்து செய்துள்ளது.
இதையடுத்து, வேலை மோசடி மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானின் இந்த புதிய முடிவு, வரும் நவம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வருகிறது.
சாதாரண இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கான ஒருவழி விசா விலக்கு வசதியை ஈரானிய இஸ்லாமிய குடியரசு அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.
குற்றவாளிகள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 22 முதல், ஈரானுக்குப் பயணம் செய்யும் அல்லது அதன் வழியாக (transit) கடந்து செல்லும் இந்தியர்கள் அனைவரும் விசா பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author