அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் எழுதிய உருக்கமான கடிதம்  

Estimated read time 0 min read

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமெரிக்க பொதுமக்களுக்கு நேரடியாக ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.
அரசாங்கங்களுக்கு இடையிலான மோதல்களுக்கு அப்பாற்பட்டு, சாதாரண குடிமக்களிடம் உரையாடும் நோக்கில் அமைந்துள்ள இந்த கடிதம், சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற சில மணி நேரங்களுக்கு முன்னதாகவே இக்கடிதம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானை ஒரு அச்சுறுத்தலாகச் சித்தரிக்கும் மேற்கத்திய நாடுகளின் பிம்பத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள பெசெஷ்கியான், ஈரானியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை என்பதை வலியுறுத்தியுள்ளார்.

You May Also Like

More From Author