முன்னணி மின்சார வாகன (EV) தயாரிப்பாளரான டெஸ்லாவின் இயக்குநர்கள் குழு, அதன் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கிற்கு பதிலாக ஒரு வாரிசைத் தேடி வருகிறது எனவும், இந்த செயல்முறைக்கு உதவுவதற்காக நிறுவனம் நிர்வாக தேடல் நிறுவனங்களை பணியமர்த்தியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த செய்திக்கு எலான் மஸ்க் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை எனவும், WSJ ஒரு தவறான கட்டுரையை வெளியிடுவதும், டெஸ்லா இயக்குநர்கள் குழுவால் முன்கூட்டியே தரப்பட்ட ஒரு தெளிவான மறுப்பைச் சேர்க்கத் தவறுவதும் மிகவும் மோசமான நெறிமுறை மீறலாகும் என X -இல் பதிவிட்டுள்ளார்.
