ஹரீஷ் ராணா வழக்கு: 13 ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு கருணைக்கொலை செய்ய அனுமதி  

Estimated read time 1 min read

கடந்த 13 ஆண்டுகளாக நிரந்தர கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த 32 வயதான ஹரீஷ் ராணாவுக்கு ‘செயலற்ற கருணைக்கொலை’ செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2018 ஆம் ஆண்டு ‘காமன் காஸ்’ (Common Cause) வழக்கில் வழங்கப்பட்ட சட்டக் கட்டமைப்பின் அடிப்படையில், இந்தியாவில் இத்தகைய அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, “தொடர் துன்பத்திலிருந்து இந்த இளைஞரை விடுவிக்க வேண்டிய கட்டத்தை நாம் எட்டிவிட்டோம்” என்று கூறி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

You May Also Like

More From Author