இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – ரூ.5, 650 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

Estimated read time 0 min read

இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை 5 மணிக்கு திருச்சி மாவட்டம் பஞ்சப்பூருக்கு வரவுள்ளார்.

முதலில் அங்கு நடைபெறும் அரசு நிகழ்சசியில், சுமாா் 5 ஆயிரத்து 650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைக்கிறாா்.

இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் 3 ஆயிரத்து 680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் சென்னை மணலியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆயிரத்து 490 கோடி முதலீட்டிலான மசகு எண்ணை உற்பத்தி ஆலையை பிரதமர் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

கிராம சதக் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கிலோ மீட்டர் நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறாா்.

தொடா்ந்து, 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமா் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

You May Also Like

More From Author