அண்மையில், ஜப்பானிய தலைமை அமைச்சர் சனாய் தகாய்ச்சி சீனாவின் தைவான் பிரேதேசம் குறித்து மோசமான கூற்றுகளை வெளிப்படையாகத் தெரிவித்தது பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம், சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்கசம், சீன அரசவை தைவான் விவகாரப் பணியகம் மற்றும் ஜப்பானிலுள்ள சீனத் தூதரகம் அடுத்தடுத்து இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இச்சம்பவத்தால் ஜப்பானின் பல்வேறு துறைகளிடையில் பெரும் கவலை ஏற்பட்டு சனாய் தகாய்ச்சி பதவிலிருந்து விலக வேண்டுமென ஜப்பானின் சில இடங்களில் பொது மக்கள் பேரணியை நடத்தி வேண்டிக்கொண்டனர்.
சனாய் தகாய்ச்சி ஜப்பானிய அரசியல் துறையில் நுழைந்த பின்பு, ஜப்பானிய ஆக்கிரமிப்புப் போர், ஜப்பானால் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தப்பட்ட பெண்கள், யசுகுனி கல்லறையில் அஞ்சலி செலுத்துவது முதலிய பிரச்சினைகளில் பன்முறையாக சிவப்புக் கோட்டை மீறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தில் போர் கைவிடும் விதியை நீக்க கோரிக்கை விடுத்த அவர், தற்காப்புப் படையை தேசிய பாதுகாப்புப் படையாக மாற்றி பாதுகாப்புக்கான செலவை பெரிதும் அதிகரித்து எதிரிகளின் தளம் மீது தாக்குதல் நடத்தும் திறனை ஜப்பான் கொண்டுள்ளதாகக் கருத்து தெரிவித்தார்.
அவரின் இந்த கொள்கைகள் பதற்றமான நிலைமையை வேண்டுமென்றே தீவிரப்படுத்தும் நோக்கமுடையதாகக் கருதப்படலாம் என்று ஜப்பானின் செய்தித்தாள் அண்மையில் வெளியிட்ட கட்டுரையில் தெரிவித்துள்ளது.
