சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் பிப்ரவரி 17-ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் அரசு சாரா தொழில் நிறுவனங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் வழங்கிய அறிக்கைகளைக் கேட்டபின், ஷிச்சின்பிங் முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், அரசு சாரா தொழில் நிறுவனங்களின் மீது கட்சி மற்றும் நாடு மேற்கொண்ட அடிப்படை கோட்பாடுகள், கொள்கைகள், சீனத் தனிச் சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச அமைப்புமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இவற்றை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், பரந்துபட்ட அரசு சாரா தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்கள், வளர்ச்சியில் ஊன்றி நின்று, சட்டப்படி அலுவலை நிர்வாகம் செய்து, கூட்டுச் செழுமையை முன்னேற்றி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கு மேலதிக பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.