ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியில் சேரும் பொருட்டு கொலம்பியா அளிதத விண்ணப்பத்தினை இவ்வங்கியின் செயற்குழு அண்மையில் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கி உறுப்பு நாடுகளின் மொத்த எண்ணிக்கை, 111ஆக அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல், உலகளவில் 81விழுக்காடு மக்கள் தொகையையும் 65விழுக்காடு உள்நாட்டு உற்பத்தி மதிப்பையும் கொண்டுள்ள நாடுகள் இவ்வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியானது, சீனாவின் முன்மொழிவில் 57 நாடுகளால் கூட்டாக நிறுவப்பட்ட சர்வதேச பலதரப்பு முதலீட்டு வங்கியாகும். இவ்வங்கியானது 2016ஆம் ஆண்டு ஜனவரியில் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியது.
