சீன அறிவியல் கழகம் மற்றும் சீனப் பொறியியல் கழகம் ஆகிய இரண்டு கல்வி நிறுவனங்கள் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த அறிஞர்கள் பற்றிய தகவலை 2025ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் வெளியிட்டன. இவ்வாண்டு, சீன அறிவியல் கழகத்தில் 73 மூத்த அறிஞர்களும், சீனப் பொறியியல் கழகத்தில் 71 மூத்த அறிஞர்களும் சேர்ந்துள்ளனர்.
மூத்த அறிஞர் என்பது, அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் வழங்கப்படும் மிக உயர்ந்த மதிப்புறு விருது ஆகும்.
மேலும், இவ்வாண்டு சீன அறிவியல் கழகத்தின் புதிய மூத்த அறிஞர்களின் சராசரி வயது 57.2 ஆகும். அவர்களில் பெண்களின் எண்ணிக்கை 5. மேலும், சீனப் பொறியியல் கழகத்தில் 8 பெண் மூத்த அறிஞர்கள் புதிதாக இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
