உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு இணைய இணைப்பு கிடைக்கவில்லை. உலகில் இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், எண்முறை துறையிலான இடைவெளி இன்னும் நிலவுகிறது என்று சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் சுட்டிக்காட்டியது. 2024ஆம் ஆண்டு உண்மைகள் மற்றும் தரவுகள் எனும் அறிக்கையை இந்த ஒன்றியம் 27ஆம் நாளன்று வெளியிட்டது.
2024ஆம் ஆண்டு உலகின் இணைய பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 550 கோடியை எட்டி, முந்தையை ஆண்டை விட 22.7 கோடி அதிகரித்தது.
அதேவேளையில் 260 கோடி மக்களுக்கு இணையச் சேவை கிடைக்கவில்லை. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 32 விழுக்காடு வகிக்கிறது.
அவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.